Jul 16, 2026
Thisaigal NewsYouTube
லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

லாபுவான் விமான நிலைய ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

Share:

லாபுவான் விமான நிலையத்தின் விமான ஓடுதளத்தில் இருந்து வெறும் 150 மீட்டர் தொலைவில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு விமானச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 5 மணியளவில், அரச மலேசிய ஆகாயப்படை அதிகாரிகளும், விமான நிலைய அதிகாரிகளும் இணைந்து ஓடுதளத்தை முழுமையாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு அனுமதி கிடைத்த பிறகே ஓடுதளம் மீண்டும் திறக்கப்படும்.

இந்தத் தற்காலிக மூடல் காரணமாக கோலாலம்பூர், கோத்தா கினபாலு மற்றும் மிரி ஆகிய நகரங்களுக்கான மாலை நேர விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படும் முன் தங்களின் விமானச் சேவை நிறுவனங்களைத் தொடர்புகொண்டு தற்போதைய நிலவரத்தை அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News