Jul 18, 2026
Thisaigal NewsYouTube
தாமான் துவாங்கு ஜாஃபர் ஆலயத்தில் நாளை வளர்பிறை சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு
தற்போதைய செய்திகள்

தாமான் துவாங்கு ஜாஃபர் ஆலயத்தில் நாளை வளர்பிறை சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

Share:

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர்-இல் அமைந்துள்ள ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை ஜுன் 27 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3.31 மணி அளவில் 'வளர்பிறை சனி பிரதோஷ' சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

திருக்கயிலாய பரம்பரை கந்தப்பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் ஆலோசனையின்படி நடைபெறும் இவ்விழாவில் பிரதோஷ சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் ஆலய உலா வரும் 'வலம் வருதல்' நிகழ்வும் சிறப்பாக நடைபெறும்.

பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாகவும் வழிபாட்டிற்காகவும் பால், நெய், பன்னீர், அபிஷேகக்கூட்டு, விபூதி, சந்தனம், கரும்பு, பழங்கள், பூக்கள் மற்றும் வில்வ இலை போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு வந்து தந்து வழிபடலாம் என ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News