Jul 16, 2026
Thisaigal NewsYouTube
63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை
தற்போதைய செய்திகள்

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

Share:

"ஜோகூரின் முன்னேற்றம், நிலைப்பெறும் நிலைத்தன்மை, தொடரும் வளர்ச்சி" எனும் கருப்பொருளின் கீழ், ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான 63 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாரிசான் நேஷனல் கூட்டணி இன்று வெளியிட்டுள்ளது.

மாநிலத்தின் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் மையமாகக் கொண்டு 6 முக்கிய அம்சங்களின் கீழ் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் சொந்த நிலத்தில் வீடு கட்ட 100 மில்லியன் ரிங்கிட் மானிய நிதி, சிறு வணிகர்களுக்கான முதல் ஆண்டு வணிக உரிமக் கட்டண விலக்கு மற்றும் வட்டி இல்லா மைக்ரோ-ஃபைனான்ஸ் நிதியுதவிகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகால தங்களின் சிறந்த நிர்வாகத் திறனின் அடிப்படையிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்