Jul 15, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

Share:

சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா அவர்களின் இளைய சகோதரியான தெங்கு புத்ரி அராபியா சுல்தான் சலாஹுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, இன்று காலை தமது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 72.

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இயற்கை எய்தியதாக சிலாங்கூர் அரண்மனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, மஸ்ஜித் சுல்தான் சலாஹுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு, மாலை 3.30 மணியளவில் ஷா ஆலம் அரச குடும்ப மையத்து கொல்லையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச் சடங்கில் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷரஃபுதீன், தெங்கு பெர்மாய்சூரி நொராஷிகின், இளவரசர் தெங்கு அமீர் ஷா, மற்றும் பகாங் சுல்தான் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related News