Sep 24, 2026
Thisaigal NewsYouTube
அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" – ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடனும் நற்பண்புகளுடனும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், ஜனநாயக முறையில் பலமுனைப் போட்டிகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என்றும், ஆனால் பிரச்சாரங்களின் போது 'இவரை நிராகரியுங்கள், அவரை நிராகரியுங்கள்' என்று பேசாமல், மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படுவதே சிறந்தது என்றும் கூறினார்.

நாளை ஜூன் 27 ஆம் தேதி ஜோகூர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ள நிலையில், ஜூலை 7-இல் முன்கூட்டிய வாக்கெடுப்பும், ஜூலை 11-ஆம் தேதி இறுதி வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News