Jun 26, 2026
Thisaigal NewsYouTube
ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்
தற்போதைய செய்திகள்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை ஜுன் 27 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் வேளையில் எண். 48, ஸ்கூடாய் தொகுதியில் ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக வழக்கறிஞர் கார்த்தியாயினி ஜெயபாலன் களம் காண்கிறார்.

"ஸ்கூடாயின் மகள், ஸ்கூடாயின் வளர்ச்சிக்கே!" எனும் தாரக மந்திரத்துடன் கார்த்தியாயினி ஜெயபாலன், மக்கள் சேவையில் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளார்.

ஸ்கூடாய்-இல் பிறந்து ஸ்கூடாய்யிலே கல்வி கற்று வளர்ந்தவரான கார்த்தியாயினி ஜெயபாலன், மலாயாப் பகல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். 2015-ஆம் ஆண்டு மலாயா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டத்தொழில் புரிந்து வருகிறார். .

2018 முதல் 2020 வரை ஜோகூர் மாநில பயனீட்டாளர், மனித வளம், ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினரின் சிறப்பு அதிகாரியாகவும், 2022 முதல் 2024 வரை பேராக், புந்தோங் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் செயலாளராகவும், அண்மையில் பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றிய பரந்த அரசியல் நிர்வாக அனுபவத்தை கார்த்தியாயினி ஜெயபாலன், கொண்டுள்ளார்.

பல்லினச் சமூக அமைப்பில் வளர்ந்த கார்த்தியாயினி ஜெயபாலன், இனம் மற்றும் பின்னணி பாராமல் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பாடுபட்டு ள்ளார். ஒவ்வொரு மலேசியப் பிரஜையும் சமமான வாய்ப்புகளும், சிறந்த வாழ்வாதாரமும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், அனைவருக்குமான நிலையான மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை நோக்கித் தொடர்ந்து பாடுபடப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

லாபுவான் விமான நிலைய ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

ஜெலுத்தோங் ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" – ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

தாமான் துவாங்கு ஜாஃபர் ஆலயத்தில் நாளை வளர்பிறை சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

தாமான் துவாங்கு ஜாஃபர் ஆலயத்தில் நாளை வளர்பிறை சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு