கோலாலம்பூர், அக்டோபர்.07-
கடந்த ஏழு ஆண்டுகளில் சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி செய்ததன் மூலம், மலேசியா 6 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்போது தைவான் மற்றும் பெரு ஆகிய நாடுகளைத் தங்களது புதிய ஏற்றுமதிச் சந்தைகளாக உருவாக்கும் முயற்சியில் அமைச்சு ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, வரும் 2030 -ஆம் ஆண்டிற்குள் டுரியான் ஏற்றுமதியை அதிகரித்து, கூடுதலாக 1.8 பில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டவுள்ளதாக எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 69,000 மெட்ரிக் டன் வரை டுரியான் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








