இஸ்ரேலின் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், உயர்கல்விக்கூடங்களிலும் ஒருமைப்பாட்டு வாரமத்தை அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 ஆம் நாள் வரை நடத்தப்படும் என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் பாலஸ்தீன ஒருமைப்பாடு பரப்புரை ஊக்குவிக்கப்படவும் மாணவர்களிடையே நேர்மறையான நல்ல பண்புகளை விதைப்பதற்காகவே இது நடத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தீவிரவாத கூறுகள், பயங்கரவாதம் தொடர்பான மாதிரி ஆயுதங்கள் ஆகியவற்றை கல்வி அமைச்சு ஒருபோது அனுமதிக்காது என அவர் கூறினார்.
"கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிலையங்கள் அமைச்சு வெளியிட்டிருக்கும் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கூறினார்.
அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பாலஸ்தீன் ஒருமைப்பாட்டு வாரம் நடத்தப்படுகிறது. விதிமுறைகளை மீறும் எந்தவொரு பள்ளியையும் அமைச்சால் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தகுந்த நடவடிக்கையையும் எடுக்கவும் முடிவும் என அவர் மேலும் சொன்னார்.








