Feb 15, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 2,571 பேருக்கு காச நோய் பாதிப்பு: சபா மாநிலம் முதலிடம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 2,571 பேருக்கு காச நோய் பாதிப்பு: சபா மாநிலம் முதலிடம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.15-

ஐந்தாவது தொற்றுநோயியல் வாரத்தில் மலேசியா முழுவதும் புதிதாக 503 காச நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளது. மாநில அடிப்படையிலானப் புள்ளி விவரங்களின்படி, 614 பாதிப்புகளுடன் சபா முதலிடத்தில் உள்ளது; அதனைத் தொடர்ந்து சிலாங்கூர், சரவாக், ஜோகூர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பண்டிகைக் காலமும் நீண்ட விடுமுறை நாட்களும் நெருங்கி வருவதால், பொதுமக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவதுடன், தும்மும்போதும் இருமும்போதும் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, நீண்ட கால இருமல், காய்ச்சல் அல்லது உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, தொற்று நோய்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Related News