May 24, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், கட்டுமானத் தொழிலாளி கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், கட்டுமானத் தொழிலாளி கைது

Share:

அம்பாங் , ஆகஸ்ட் 26-

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி அம்பாங், தமன் சாகா -வில் உள்ள ஒரு வீட்டில் 16 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் கட்டுமானத் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் 36 வயது தாயார் செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் அந்த கட்டுமானத் தொழிலாளி கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது குறித்து சந்தேகித்து அந்த மாது, இது குறித்து ஆராயத் தொடங்கியதில் அந்த கட்டுமானத்தொழிலாளிளின் ஆபாச சேட்டை அம்பலமானதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் 24 வயது ஆடவர் ஒருவரை கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் சுபாங்கில் தாங்கள் கைது செய்துள்ளதாக ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News