மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையினின் பதவி நிலை குறித்து, சட்டத்துறைத் தலைவரின் அலுவலகமான ஏஜிசியிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் போலீஸ் படை ஆணையத்திடமும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இறுதி முடிவு மாமன்னரின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏகேபிஎஸ்ஸில் முஹமட் ஷுஹைலியின் பணிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கானது என்றும், அதற்கு மாமன்னரின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் அவர் விளக்கினார்.
ஷா ஆலாம் நகரில் இன்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டு அதிகாரத்துவச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய மாநாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஹமட் காலிட், ஏகேபிஎஸ்ஸில் பணியமர்த்தப்பட்டுள்ள முஹமட் ஷுஹைலி, போலீஸ் அதிகாரி என்பதால் அவருக்கான பொறுப்பு மலேசிய அரச போலீஸ் படையிடமே இருக்கும் என்றார்.
இதற்கிடையில், முஹமட் ஷுஹைலி தொடர்ந்து ஏகேபிஎஸ் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.








