Oct 28, 2026
Thisaigal NewsYouTube

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: வங்கதேசத்தினர் 8 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: வங்கதேசத்தினர் 8 பேர் கைது

கோலாலம்பூர் சௌ கிட் பகுதியில் ‘ஹுண்டி’ எனப்படும் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் வங்கதேசத்தினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், 24,720 ரிங்கிட் ரொக்கம், வங்கதேசக் கடவுச்சீட்டுகள் 5, கைப்பேசிகள் 5, மடிக்கணினி, கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சில்லறை மற்றும் மொத்த விற்பனைக் கடைகளை மறைப்பாகப் பயன்படுத்தி, உள்ளூர் வங்கிக் கணக்குகள் மற்றும் மின்னணுப் பணப்பைகள் மூலம் இந்தப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குடிநுழைவுத்துறை தெரிவித்தது. டிஜிட்டல் கணக்கு வசதி இல்லாதவர்களிடம் ரொக்கமாகப் பணம் பெற்றும் அனுப்பியும் வந்துள்ளனர் என்று டத்தோ ஸாகாரியா தெரிவித்தார்.

2026 ஜனவரி முதல் அக்டோபர் வரை மின்னணுப் பணப்பைக் கணக்குகளில் 180,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. கைது செய்யப்பட்ட 8 பேரும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாணவர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரிக்கு 7½ ஆண்டுகள் சிறை

மாணவர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரிக்கு 7½ ஆண்டுகள் சிறை

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பரவி வரும் 'சுகர் பேபி' கலாச்சாரம்: திடுக்கிடும் ஆய்வு அறிக்கை குறித்து அமைச்சு விசாரணை

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பரவி வரும் 'சுகர் பேபி' கலாச்சாரம்: திடுக்கிடும் ஆய்வு அறிக்கை குறித்து அமைச்சு விசாரணை

கார்ப்பரேட் மாஃபியா விசாரணை: 409 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சொத்துகளை முடக்கிய போலீஸ்

கார்ப்பரேட் மாஃபியா விசாரணை: 409 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சொத்துகளை முடக்கிய போலீஸ்

தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்

தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்

பெர்லிஸ் எம்எம்இஏ அதிகாரி உயிரிழப்பு: உள்விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது

பெர்லிஸ் எம்எம்இஏ அதிகாரி உயிரிழப்பு: உள்விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது

மலேசியாவுக்கு 9 மாதங்களில் 3.22 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருகை

மலேசியாவுக்கு 9 மாதங்களில் 3.22 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருகை