Oct 28, 2026
Thisaigal NewsYouTube

தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்தபோது, சமூக ஆர்வலர் தமிம் தஹ்ரி அப்துல் ரஸாக் கடுமையாக நடத்தப்பட்டதுடன், மற்ற கைதிகள் முன்னிலையில் ஆடைகளைக் களையுமாறு வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஐபிசிசி எனப்படும் சுயாதீன போலீஸ் நடத்தை ஆணையத்துக்கு இதுவரை எந்தப் புகாரும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி நிலவரப்படி புகார் எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போலீஸ் அதிகாரிகள் மீதான தவறான நடத்தை தொடர்பாகப் புகார் கிடைத்தால், 2022-ஆம் ஆண்டின் ஐபிசிசி சட்டத்தின் 25-ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைஃபுடின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →