Oct 28, 2026
Thisaigal NewsYouTube

பெர்லிஸ் எம்எம்இஏ அதிகாரி உயிரிழப்பு: உள்விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெர்லிஸ் எம்எம்இஏ அதிகாரி உயிரிழப்பு: உள்விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது

பெர்லிஸ் கடற்பகுதியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த படகு மோதலில், கடல்சார் அமலாக்க நிறுவனமான எம்எம்இஏ அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது குறித்து கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் வைஸ்-அட்மிரல் முஹமட் ஸாவாவி அப்துல்லா கூறுகையில், சம்பவத்துக்கான காரணங்களையும் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகளையும் கண்டறிய உள்விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, நிறுவனத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டுமா? என்பதும் ஆய்வு செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

நேற்று அதிகாலை 12.30 மணியளவில் பெர்லிஸ், சுங்கை பாடாங் கடற்பகுதியில் வழக்கமான எல்லைக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய படகு ஒன்றைக் கண்டு அதனைத் துரத்தியபோது, அமலாக்கப் படகு கான்கிரீட் கட்டமைப்பில் மோதி இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததோடு, 3 அதிகாரிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →