Oct 28, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவுக்கு 9 மாதங்களில் 3.22 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவுக்கு 9 மாதங்களில் 3.22 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருகை

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை மலேசியாவுக்கு 3.22 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பயணிகளின் வருகை 2.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அவர் குரிப்பிட்டுள்ளார்.

மேலும், சுற்றுலாத் துறை மூலம் நாட்டிற்கு 323 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்துள்ளதுடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.9 விழுக்காடு பங்களிப்பையும் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், 2026 முதல் 2027 வரையிலான மலேசியாவுக்கு வருகை பிரசாரம் உள்ளிட்ட திட்டங்களுக்காக சுற்றுலா அமைச்சிற்கு 935 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →