Oct 28, 2026
Thisaigal NewsYouTube

கார்ப்பரேட் மாஃபியா விசாரணை: 409 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சொத்துகளை முடக்கிய போலீஸ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார்ப்பரேட் மாஃபியா விசாரணை: 409 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சொத்துகளை முடக்கிய போலீஸ்

தொழிலதிபர்களை மிரட்டி, நிறுவனப் பங்குகளைச் சந்தை விலையை விடக் குறைவாக விற்க வற்புறுத்தியதாகக் கூறப்படும் ‘கார்ப்பரேட் மாஃபியா’ தொடர்பான விசாரணையில், 409 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சொத்துகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், 323.59 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 70 பங்குப் பரிவர்த்தனைக் கணக்குகளும், 85.62 மில்லியன் ரிங்கிட் இருப்பிலுள்ள 404 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், 8 சொத்துகள், 11 வாகனங்கள் மற்றும் 417 மத்திய பத்திர வைப்புக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதுவரை 70 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் இந்த விசாரணைக்கு உதவ வேண்டிய நபர்களாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதையும் சைஃபுடின் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக அதிகார துஷ்பிரயோகம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நிலவரம், விசாரிக்கப்பட்ட அமலாக்க அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் விசாரணையில் கிடைத்த முடிவுகள் குறித்து, பெரிக்காத்தான் நேஷனல், பெங்காலான் செப்பா நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் மார்ஸுக் ஷாரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சைஃபுடின் இதனைத் தெரிவித்துள்ளார்.

  

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பரவி வரும் 'சுகர் பேபி' கலாச்சாரம்: திடுக்கிடும் ஆய்வு அறிக்கை குறித்து அமைச்சு விசாரணை

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பரவி வரும் 'சுகர் பேபி' கலாச்சாரம்: திடுக்கிடும் ஆய்வு அறிக்கை குறித்து அமைச்சு விசாரணை

தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்

தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்

பெர்லிஸ் எம்எம்இஏ அதிகாரி உயிரிழப்பு: உள்விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது

பெர்லிஸ் எம்எம்இஏ அதிகாரி உயிரிழப்பு: உள்விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது

மலேசியாவுக்கு 9 மாதங்களில் 3.22 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருகை

மலேசியாவுக்கு 9 மாதங்களில் 3.22 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருகை

லெம்பா பந்தாய் தொகுதியில் 1,600 குடும்பங்களுக்கு தீபாவளி வவுச்சர் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் அறிவிப்பு

லெம்பா பந்தாய் தொகுதியில் 1,600 குடும்பங்களுக்கு தீபாவளி வவுச்சர் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் அறிவிப்பு

கணவன், மனைவி பகிர்ந்து கொள்ள மகப்பேறு விடுப்பு – அரசு பரிசீலிக்கும்

கணவன், மனைவி பகிர்ந்து கொள்ள மகப்பேறு விடுப்பு – அரசு பரிசீலிக்கும்