Oct 28, 2026
Thisaigal NewsYouTube

மாணவர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரிக்கு 7½ ஆண்டுகள் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரிக்கு 7½ ஆண்டுகள் சிறை

2023ஆம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவர் உயிரிழந்த வழக்கில், முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரி நஸ்ரி அப்துல் ரஸாக் என்பவருக்கு ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

47 வயதான நஸ்ரி, கொலைக் குற்றச்சாட்டிலிருந்து குறைக்கப்பட்ட குற்றச்சாட்டான நோக்கமின்றி மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி புபீந்தர் சிங் இந்தத் தண்டனையை விதித்தார்.

இந்தத் தண்டனை, அவர் கைது செய்யப்பட்ட 2023 டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்படும். கெடா போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றிய நஸ்ரி, ஈப்போவில் உள்ள எஸ்எம்கே ஜாத்தி இடைநிலைப் பள்ளிக்கு அருகே ஸாஹாரிஃப் அஃபெண்டி ஸம்ரி என்ற மாணவரின் மரணத்துக்குக் காரணமானதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

அந்த மாணவரை காரில் மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்ற அந்த போலீஸ் அதிகாரி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் உதவியின் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளை வளர்க்கும் 9 தாய்மார்களுக்கு விருது; தியாகத்துக்கு அங்கீகாரம்

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளை வளர்க்கும் 9 தாய்மார்களுக்கு விருது; தியாகத்துக்கு அங்கீகாரம்

மாமன்னரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த வழக்கில் செக்குபார்டுக்கு 4 மாதச் சிறை

மாமன்னரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த வழக்கில் செக்குபார்டுக்கு 4 மாதச் சிறை

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: வங்கதேசத்தினர் 8 பேர் கைது

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: வங்கதேசத்தினர் 8 பேர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பரவி வரும் 'சுகர் பேபி' கலாச்சாரம்: திடுக்கிடும் ஆய்வு அறிக்கை குறித்து அமைச்சு விசாரணை

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பரவி வரும் 'சுகர் பேபி' கலாச்சாரம்: திடுக்கிடும் ஆய்வு அறிக்கை குறித்து அமைச்சு விசாரணை

கார்ப்பரேட் மாஃபியா விசாரணை: 409 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சொத்துகளை முடக்கிய போலீஸ்

கார்ப்பரேட் மாஃபியா விசாரணை: 409 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சொத்துகளை முடக்கிய போலீஸ்

தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்

தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்