Oct 28, 2026
Thisaigal NewsYouTube

மாமன்னரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த வழக்கில் செக்குபார்டுக்கு 4 மாதச் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாமன்னரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த வழக்கில் செக்குபார்டுக்கு 4 மாதச் சிறை

பெர்சாத்து கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், சமூகச் செயற்பாட்டாளருமான பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் என்ற செக்குபார்ட் மாமன்னரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றத்திற்காக நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர்மா இஸ்மாயில் இந்தத் தண்டனையை விதித்ததாக வழக்கறிஞர் ரஃபிக் ரஷிட் அலி தெரிவித்தார். எனினும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரது பிணைத்தொகையும் 5,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

47 வயதான பட்ருல், 2024 ஜனவரி 22ஆம் தேதி வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக அதே ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டார். 2025ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அவரைத் தற்காப்பு வாதம் புரிய உத்தரவிட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளை வளர்க்கும் 9 தாய்மார்களுக்கு விருது; தியாகத்துக்கு அங்கீகாரம்

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளை வளர்க்கும் 9 தாய்மார்களுக்கு விருது; தியாகத்துக்கு அங்கீகாரம்

மாணவர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரிக்கு 7½ ஆண்டுகள் சிறை

மாணவர் உயிரிழந்த வழக்கில் முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரிக்கு 7½ ஆண்டுகள் சிறை

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: வங்கதேசத்தினர் 8 பேர் கைது

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: வங்கதேசத்தினர் 8 பேர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பரவி வரும் 'சுகர் பேபி' கலாச்சாரம்: திடுக்கிடும் ஆய்வு அறிக்கை குறித்து அமைச்சு விசாரணை

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பரவி வரும் 'சுகர் பேபி' கலாச்சாரம்: திடுக்கிடும் ஆய்வு அறிக்கை குறித்து அமைச்சு விசாரணை

கார்ப்பரேட் மாஃபியா விசாரணை: 409 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சொத்துகளை முடக்கிய போலீஸ்

கார்ப்பரேட் மாஃபியா விசாரணை: 409 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சொத்துகளை முடக்கிய போலீஸ்

தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்

தமிம் தஹ்ரி மீதான போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு: புகார் ஏதுமில்லை என அமைச்சர் தகவல்