கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பெர்லிஸ் மந்திரி பெசாரையும், கிளந்தான் மந்திரி பெசாரையும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று கெடா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மஹ்ஃபூஸ் ஒமார் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணுவதில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி தொடர்ந்து வறட்டுக் கெளரவுத்துடனும், பிடிவாதப் போக்குடனும் நடந்து கொள்வாரோயானல் அது கெடா மாநில மக்களுக்குதான் பாதிப்பையும், இழப்பையும் ஏற்படுத்தும் என்று அமானா கட்சியின் முன்னாள் போகோக் செனா நாடாளுமன்ற உறுப்பினருமான மஹ்ஃபூஸ் ஒமார் எச்சரித்துள்ளார்.
பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் ஷுக்ரி ரம்லியும், கிளந்தான் மந்திரி புசார் அமாட் யாகோப்பும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்த போதிலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணுவதில் மென்மையான போக்குடன் மாநில மக்களுக்காக பல விஷயங்களை சாதித்து வருகின்றனர்.
மிக அடக்கமாக நடந்து கொள்ளும் அவர்களின் பண்பு, மிகுந்த கவன ஈர்ப்பாக உள்ளது அமானா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற கொறடாவான மஹ்ஃபூஸ் ஒமார் தெரிவித்தார்.
கெடா மந்திரி பெசார் சனுசி மத்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து அடாவடித்தனமாக நடந்து கொள்வாரேயானால் கெடா மாநிலத்தில் முதலீடு செய்வதற்குப் பலர் தயக்கம் காட்டுவர் என்பதையும் அந்த மூத்த அரசியல்வாதி நினைவுறுத்தினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


