May 4, 2026
Thisaigal NewsYouTube
ஏர் ஏசியா சுமார் 150 ஏர்பஸ் குறுகிய தூர விமானங்களை கொள்முதல் செய்யவுள்ளது
தற்போதைய செய்திகள்

ஏர் ஏசியா சுமார் 150 ஏர்பஸ் குறுகிய தூர விமானங்களை கொள்முதல் செய்யவுள்ளது

Share:

ஏர்ஏசியா எக்ஸ் நிறுவனம் சுமார் 150 ஏர்பஸ் ஏ220 இரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதிக்கட்டத்தில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்த வகை விமானங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய கொள்முதலாக அமையும் என்று கூறப்படுகின்றது.

இந்த ஒப்பந்த அறிவிப்பு இந்த வாரத்திலேயே வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது.

இருப்பினும், ஏர்பஸ் சி வாடிக்கையாளர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

அதேவேளை, ஏர்ஏசியாவின் கட்டுப்பாட்டு பங்குதாரரான கேப்பிடல் ஏ தரப்பும் இதுகுறித்து உடனடி பதில் அளிக்கவில்லை.

இந்த கொள்முதல் ஏர்ஏசியா எக்ஸ் நிறுவனத்தின் நீண்டகால விரிவாக்கத் திட்டத்தின் முக்கிய பகுதியாக பார்க்கப்படுகின்றது.

Related News