Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம்

Share:

சபா, Tawau விமானநிலையத்தில், சட்டவிரோத கள்ள குடியேறிகள் கடத்தல் தொடர்பில், 5 சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என சுங்கத்துறை தலைமை இயக்குனர் Datuk Ruslin Jusoh தெரிவித்தார்.

சட்ட மீறல் மற்றும் நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி பாராமல் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என Ruslin Jusoh எச்சரித்தார்.
சுங்கத்துறை அதிகாரிகள் நேர்மையும் நன்னெறிப்பண்பு உடையவர்களாக இருப்பதை உறுதி செய்ய பயிற்சிப்பட்டறைகளும், பல அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

Related News