Oct 16, 2026
Thisaigal NewsYouTube

80 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்ட போலீஸ் அதிகாரி கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
80 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்ட போலீஸ் அதிகாரி கைது

ஜார்ஜ்டவுன், டிச. 19-


போலீஸ் தடுப்புக்காவலில் உள்ள தனது கணவரை விடுப்பதற்கு உதவிக்கோரிய மாதுவிடம் 80 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்டதாக நம்ப்படும் காப்பரல் அந்தஸ்தில் உள்ள போலீஸ்காரரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

40 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ்காரர், விசாரணைக்கு ஏதுவாக வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வரை தடுப்புக்காவல் வைப்பதற்கு இன்று காலையில் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான நீதிமன்ற ஆணையை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த மாதுவின் கணவரை விடுவிப்பதற்கு 80 ஆயிரம் வெள்ளி வரை லஞ்சம் கேட்டு, அந்த போலீஸ்காரர் பேரம் பேசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →