ஷா ஆலாம், நவம்பர்.22-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, தனது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவை அழைத்துக் கொண்டுச் சொந்தமாக காரைச் செலுத்தியது மிக கவன ஈர்ப்பாக மாறியது.
தங்கள் முகநூலில் பதிவேற்றப்பட்ட 59 வினாடி காணொளியில், காரைச் செலுத்தும் போது, இரண்டு கைகளையும் ஸ்டீயரிங் மீது வைக்குமாறு துன் மகாதீருக்கு சித்தி ஹஸ்மா அறிவுறுத்துவதைக் காண முடிந்தது.
இருப்பினும், ஓட்டுநர் வழிநடத்தாமலேயே தானாக நகரும் திறன் கொண்ட வாகனம் என்பதால் ஸ்டீயரிங்கைப் பிடித்து, திருப்பத் தேவையில்லை என்று துன் மகாதீர் நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள ஒரு உணவகத்திற்குச் செல்லும் போது தம்பதியினர் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டுச் சென்றதை அந்த காணொளியில் காண முடிந்தது.








