May 3, 2026
Thisaigal NewsYouTube
இணையத்தில் உலாவும் போலி தொலைப்பேசி எண்களை நம்ப வேண்டாம் - ஏர் ஏசியா எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

இணையத்தில் உலாவும் போலி தொலைப்பேசி எண்களை நம்ப வேண்டாம் - ஏர் ஏசியா எச்சரிக்கை

Share:

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி வாடிக்கையாளர் சேவை எண்கள் தொடர்பான மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு ஏர் ஏசியா அதன் பயணிகளை எச்சரித்துள்ளது.

அதிகாரப்பூர்வ ஏர் ஏசியா உதவி அழைப்பு எண் என்று கூறி, பொய்யான தொலைபேசி எண்களைப் பகிரும் பதிவுகள், இணையத்தில் பரவி வருவதாகவும், அந்த எண்களுக்கு, நிறுவனத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.

முன்பதிவுகள் தொடர்பாக அழைக்கும் பயணிகளை இலக்காகக் கொண்டு, இம்மோசடி எண்களானது பகிரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏர் ஏசியா நிறுவனம் தொலைபேசி அழைப்புகள் வாயிலாக வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

இது போன்ற மோசடிகளில் எண்களில் இருந்து வாட்சாப் மற்றும் பிற அதிகாரப்பூர்வமற்றம் தளங்களிலிருந்து வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஏர் ஏசியா எச்சரித்துள்ளது.

Related News