MYAirline Sdn Bhd விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, மலேசிய நாட்டிற்கு அதிகமான விமான சேவை நிறுவனங்கள் தேவையற்றது என்பதை உணர்த்தியுள்ளது என விமான சேவை ஆய்வாளர் ஷுகோர் யூசோப் தனது கருத்தை பெரித்தா ஹரியான் நாளிதழ் வழி வெளியிட்டுள்ளார்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் , மலேசியாவில் விமான சேவை, சராசரி ஒரு நாட்டுக்குத் தேவையான அளவில் இருந்தால் போதுமானது. உலக நாடுகளைக் காட்டிலும் மலேசிய மிக குறுகிய விமான சேவைகளை மட்டுமே பயன் படுத்தி வருவதால், அதிகமான விமான சேவை நிறுவனங்களை இங்கு நிறுவதற்கான தேவை இன்னும் இல்லை என அவர் குறிப்பிட்டுக் கூறினார்.








