கோலாலம்பூர்,ஜூலை 21-
B40 தரப்பினருக்கு சட்ட ரீதியிலான உதவிகளை நல்கவும், சட்டம் தொடர்பான தகவல்களை பகிரவும் JUSTICE ON WHEELS திட்டம் தீபகற்பத்தில் விரிவுப்படுத்தப்படும்.
இதற்கு முன் சபா சரவாக்கில் மேற்கொள்ளப்பட்ட அத்திட்டம் இம்மாத இறுதி முதல் நெகிரி செம்பிலானிலும், மற்ற மாநிலங்களிலும் வழங்கப்படவுள்ளது.
சட்ட விவகாரங்களை உட்படுத்திய சிக்கலைகளை தீர்க்க குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு JUSTICE ON WHEELS திட்டம் உறுதுணையாக இருக்கும் என பிரதமர் துறையின் சட்டக் கழக மறுமலர்ச்சி துணையமைச்சர் M. Kulasegaran தெரிவித்தார்.








