Oct 20, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூரில் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி – வைரலான காணொளி குறித்து போலீசார் விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூரில் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி – வைரலான காணொளி குறித்து போலீசார் விசாரணை

ஜோகூர் மாநிலம், கோத்தா திங்கி அருகே உள்ள ஃபெல்டா லோக் செலாத்தான் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி, ஓராங் கோத்தா திங்கி என்ற முகநூல் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்தக் காணொளி நேற்று அக்டோபர் 19-ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டத்தைக் கண்டறிந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 453 மற்றும் 511 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் இந்தச் சம்பவம் குறித்து ஊகங்களை வெளியிடுவதையோ, ஆதாரமற்ற கருத்துகளைப் பதிவிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →