Oct 19, 2026
Thisaigal NewsYouTube

நல உதவி பெறும் வருமான வரம்பை 2,705 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் – எம்.பி. வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நல உதவி பெறும் வருமான வரம்பை 2,705 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் – எம்.பி. வலியுறுத்தல்

நல உதவிகளைப் பெறுவதற்கான குடும்ப வருமான வரம்பை மாதம் 1,236 ரிங்கிட்டிலிருந்து 2,705 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் என்று புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷிட் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் 2027 வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய அவர், தற்போதைய 1,236 ரிங்கிட் என்பது உணவுக்கான வறுமைக் கோட்டை மட்டுமே குறிக்கிறது என்றார். 2024ஆம் ஆண்டின் தேசிய வறுமைக் கோடு 2,705 ரிங்கிட்டாக உள்ள நிலையில், வாடகை, மின்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

வருமானம் சிறிதளவு உயர்ந்ததற்காக உதவிகளை முழுமையாக நிறுத்தக்கூடாது என்றும், குடும்பத்தின் அளவு, வசிக்கும் இடம், வாழ்க்கைச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கிடையில், 2027ஆம் ஆண்டு சமூக நலத் துறையின் உதவிகளுக்காக அரசாங்கம் ஏறத்தாழ 3.3 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சி – சிறப்பு நூல், தபால் தலை, நினைவு நாணயம் வெளியீடு

சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சி – சிறப்பு நூல், தபால் தலை, நினைவு நாணயம் வெளியீடு

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்