Oct 19, 2026
Thisaigal NewsYouTube

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

நவம்பர் 1ஆம் தேதி முதல், தரைமார்க்க பொது போக்குவரத்து வாகனங்கள் ஆணையமான அபாட் (APAD) உரிமம் பெற்ற பேருந்து முனையங்கள் வழியாக மட்டுமே விரைவுப் பேருந்து பயணச்சீட்டுகளை விற்பனை செய்ய அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

மலேசிய பேருந்து இயக்குநர்கள் சங்கத் தலைவர் அஷ்ஃபார் அலி, இந்தப் புதிய விதிமுறை குறித்து தங்களிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும், அக்டோபர் 16ஆம் தேதியிட்ட கடிதம் மூலமே தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுப்பாடு பயணிகள் பல்வேறு இணையதளங்களில் கட்டணங்களை ஒப்பிட்டு, குறைந்த விலையில் பயணச்சீட்டுகளை வாங்கும் வாய்ப்பைப் பாதிக்கும் என்றும் அவர் கூறினார். பேருந்து நிறுவனங்கள் சொந்தமாக உருவாக்கிய இணையதளங்கள், பயணச்சீட்டு விற்பனை முறைகளும் பாதிக்கப்படலாம் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டிஜிட்டல் தளங்களுக்கான புதிய வணிகக் கட்டணம் பயணிகளிடம் அல்ல, பேருந்து நிறுவனங்களிடமே வசூலிக்கப்படும் என்று அபாட் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நல உதவி பெறும் வருமான வரம்பை 2,705 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் – எம்.பி. வலியுறுத்தல்

நல உதவி பெறும் வருமான வரம்பை 2,705 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் – எம்.பி. வலியுறுத்தல்

சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சி – சிறப்பு நூல், தபால் தலை, நினைவு நாணயம் வெளியீடு

சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சி – சிறப்பு நூல், தபால் தலை, நினைவு நாணயம் வெளியீடு

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்