Oct 19, 2026
Thisaigal NewsYouTube

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் நலனையும் மேம்படுத்தியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நிதி அமைச்சுப் பணியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர், மானியங்களை இலக்கிட்டு வழங்குதல், நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், அரசாங்க நிர்வாகத்தில் நல்லாட்சியை மேம்படுத்துதல் ஆகியவை சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் என்றார். நாட்டின் தீவிர வறுமை விகிதம் 0.09 விழுக்காடாகக் குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனினும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 முதல் 120 அமெரிக்க டாலர் வரை உயர்ந்திருப்பது, பொருட்களின் விலையையும் வாழ்க்கைச் செலவையும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார். நாட்டின் கடன்களைப் பொறுப்புடன் நிர்வகித்து, எதிர்காலத் தலைமுறையினருக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல் பொருளாதார வளர்ச்சியைத் தொடர வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் – ராயர்  வலியுறுத்தல்

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் – ராயர் வலியுறுத்தல்

அவதூறு வழக்கில் அக்மாலுக்குப் படுதோல்வி – திரேசா கோக்கிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு

அவதூறு வழக்கில் அக்மாலுக்குப் படுதோல்வி – திரேசா கோக்கிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு