Oct 19, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் – ராயர் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் – ராயர்  வலியுறுத்தல்

போலீஸ் தடுப்புக் காவலில் உயிரிழந்த நோரிஸ்வான் ஸுல்கிஃப்லி விவகாரத்தில், உள்துறை அமைச்சர் தலையிட்டு வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ்என் ராயர் வலியுறுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்து, கொலைக் குற்றத்துக்கான குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின்கீழ் விசாரணை நடத்தவும் அவர் கோரியுள்ளார்.

செப்டம்பர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட நோரிஸ்வான், 11 நாட்கள் செராஸ் போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 1ஆம் தேதி உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் உள்ளிட்ட 21 காயங்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு விலா எலும்புகள் முறிவு, மூளையில் ரத்தக்கசிவு, வயிற்றுப் பகுதியில் உள் ரத்தக்கசிவு ஆகியவையும் அதில் அடங்கும். அவர் கீழே விழுந்ததால் காயமடைந்தார் என்ற விளக்கத்தை ராயர் நிராகரித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

அவதூறு வழக்கில் அக்மாலுக்குப் படுதோல்வி – திரேசா கோக்கிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு

அவதூறு வழக்கில் அக்மாலுக்குப் படுதோல்வி – திரேசா கோக்கிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு