ஊழல் மற்றும் நிதிக் குற்றங்களை ஒழிப்பதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், மொரீஷியஸின் நிதி குற்றவியல் ஆணைய அமைப்புடன் தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாலிம் அமான் அண்மையில் மொரீஷியஸுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வப் பயணத்தின்போது, இரு அமைப்புகளும் விசாரணை, சட்ட நடவடிக்கை, சொத்துகளை மீட்டெடுத்தல் மற்றும் ஊழல் தடுப்புக் கல்வி ஆகிய துறைகளில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டன.
மேலும், மொரீஷியஸ் சட்டத்துறைத் தலைவர் எச்இ காவின் பாட்ரிக் சிரில் கொளோவர் மற்றும் அரசுத் தரப்பு வழக்குப் பிரிவின் இயக்குநர் அப்தூல் ரஷிட் அஹ்மின் ஆகியோரையும் மலேசியக் குழுவினர் சந்தித்தனர். இரு அமைப்புகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மொரீஷியஸ் ஆணையத்தின் தலைவரை அடுத்த ஆண்டு மலேசியாவுக்கு வருமாறு அப்துல் ஹாலிம் அழைப்பு விடுத்துள்ளார்.








