பினாங்கு, பாயான் லெப்பாஸில் உள்ள கம்போங் புக்கிட் பகுதியில் இன்று திங்கட்கிழமை நண்பகலில் மரம் முறிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்தன.
நண்பகல் 12.56 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஶ்ரீ பாலிக் பூலாவ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை. மரத்தை வெட்டி அகற்றும் பணியில் மலேசிய மக்கள் தற்காப்புப் படை மற்றும் கெர்தாக் சங்குல் தன்னார்வத் தீயணைப்புப் படையினரும் இணைந்து செயல்பட்டனர்.








