Oct 19, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம் காரணமாக, மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களிலும் பகாங் மாநிலத்தின் குவாந்தான், ரொம்பின், பெந்தோங் பகுதிகளிலும் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். எனினும், அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப்படும் பெற்றோர், பள்ளிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அவர்களை வீட்டில் வைத்திருக்கலாம். காற்றுத் தரக் குறியீட்டைத் தொடர்ந்து கண்காணித்து, உடல்நல ஆபத்து அதிகமுள்ள மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துமாறும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புகைமூட்டத்தால் பள்ளி மதிப்பீடுகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில தேர்வுகளுக்கான மதிப்பெண்களைப் பதிவேற்றும் காலக்கெடுவை கல்வி அமைச்சு நீட்டித்துள்ளது. கல்வியாண்டு இறுதி மதிப்பீடு மற்றும் தேர்வுகளுக்கான காலக்கெடு நவம்பர் 21ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. உடற்கல்வி, விளையாட்டு மற்றும் இணைப்பாட நடவடிக்கைகளுக்கான மதிப்பெண்களைப் பதிவேற்றும் இறுதிநாள் டிசம்பர் 5ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →