Oct 19, 2026
Thisaigal NewsYouTube

அவதூறு வழக்கில் அக்மாலுக்குப் படுதோல்வி – திரேசா கோக்கிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அவதூறு வழக்கில் அக்மாலுக்குப் படுதோல்வி – திரேசா கோக்கிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு

ஜசெக மூத்த தலைவரும், செபூத்தே எம்.பி.யுமான திரேசா கோக் தொடுத்த அவதூறு வழக்கில், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சால்லே தோல்வியடைந்தார். தெரேசா கோக்கிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடும், வழக்குச் செலவாக 50 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்க மலாக்கா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், திரேசா கோக்கிற்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட அக்மாலுக்குத் தடை விதித்த நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பதிவுகளைச் சமூக ஊடகங்களிலிருந்து நீக்கவும் உத்தரவிட்டது.

நாட்டின் ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அக்மால் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகளின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டு திரேசா கோக் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். தீர்ப்பை வரவேற்ற திரேசா கோக், ஒருவரின் நற்பெயருக்குச் சேதம் விளைவிக்கும் அவதூறான பதிவுகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் – ராயர்  வலியுறுத்தல்

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் – ராயர் வலியுறுத்தல்

பினாங்குக்கு நேரடி விமானச் சேவையைத் தொடங்கியது பாத்தேக் ஏர் – மருத்துவச் சுற்றுலாவுக்கும் புதிய வாய்ப்பு

பினாங்குக்கு நேரடி விமானச் சேவையைத் தொடங்கியது பாத்தேக் ஏர் – மருத்துவச் சுற்றுலாவுக்கும் புதிய வாய்ப்பு

அம்பாங் கோவில் மோதல்: 15 முதல் 20 வயதுக்குட்பட்ட 13 பேர் கைது

அம்பாங் கோவில் மோதல்: 15 முதல் 20 வயதுக்குட்பட்ட 13 பேர் கைது