Oct 19, 2026
Thisaigal NewsYouTube

பினாங்குக்கு நேரடி விமானச் சேவையைத் தொடங்கியது பாத்தேக் ஏர் – மருத்துவச் சுற்றுலாவுக்கும் புதிய வாய்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்குக்கு நேரடி விமானச் சேவையைத் தொடங்கியது பாத்தேக் ஏர் – மருத்துவச் சுற்றுலாவுக்கும் புதிய வாய்ப்பு

இந்தோனேசியாவின் பாத்தாம் தீவிலிருந்து பினாங்குக்கு நேரடி விமானச் சேவையை பாத்தேக் ஏர் தொடங்கியுள்ளது. சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 18ஆம் தேதி, பாத்தாமின் ஹாங் நாடிம் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்ட முதல் விமானம், பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது. இதன் மூலம், ரியாவ் தீவுப் பகுதி பயணிகள் இடைநிறுத்தமின்றிப் பினாங்குக்குச் செல்ல முடியும்.

இந்தோனேசிய நோயாளிகள் பினாங்கில் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கும் இச்சேவை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பினாங்கு சன்வே மெடிக்கல் செண்டர், பினாங்கு மருத்துவமனை, கேபிஜே பினாங்கு நிபுணத்துவ மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுடன் பாத்தேக் ஏர் இணைந்து செயல்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →