Oct 19, 2026
Thisaigal NewsYouTube

அம்பாங் கோவில் மோதல்: 15 முதல் 20 வயதுக்குட்பட்ட 13 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அம்பாங் கோவில் மோதல்: 15 முதல் 20 வயதுக்குட்பட்ட 13 பேர் கைது

அம்பாங், கம்போங் பாரு அம்பாங், ஜாலான் மெர்டேக்காவில் உள்ள கோவில் வளாகத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 15 முதல் 20 வயதுக்குட்பட்ட 13 இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12.01 மணியளவில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்த மோதலை, பணியிலிருந்த மக்கள் தற்காப்புப் படையினர் தலையிட்டு கட்டுப்படுத்தினர். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரும்புத் தடிக்கம்பி, பேஸ்பால் மட்டை ஆகியவற்றையும் அவர்கள் கைப்பற்றினர்.

கோவில் நிர்வாகம், மோதலில் ஈடுபட்ட 13 பேரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தது. அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அனுவார் காலிட் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் 148ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

இளைஞர்கள் மோதல் மற்றும் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் சமூக நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
70 ஆண்டுகால வாழ்க்கைத் துணையைப் பிரிந்த துயரம் – இறைவன் இவ்வளவு காலம் இணைத்திருந்ததற்கு நன்றி கூறும் டாக்டர் மகாதீர்

70 ஆண்டுகால வாழ்க்கைத் துணையைப் பிரிந்த துயரம் – இறைவன் இவ்வளவு காலம் இணைத்திருந்ததற்கு நன்றி கூறும் டாக்டர் மகாதீர்

சிலாங்கூர் இளவரசரின் பாதுகாவலர் என ஆள்மாறாட்டம் – விசாரணைக்கு அரண்மனை வலியுறுத்தல்

சிலாங்கூர் இளவரசரின் பாதுகாவலர் என ஆள்மாறாட்டம் – விசாரணைக்கு அரண்மனை வலியுறுத்தல்

1எம்.டி.பி. கடன்கள் அனைத்தும் செலுத்தி முடிக்கப்பட்டதா? – அன்வார் மறுப்பு

1எம்.டி.பி. கடன்கள் அனைத்தும் செலுத்தி முடிக்கப்பட்டதா? – அன்வார் மறுப்பு

இசிஆர்எல் ரயில் கட்டணம் 125 ரிங்கிட்டில் தொடக்கம் – நவம்பர் மத்தியில் பயணச் சீட்டு விற்பனை

இசிஆர்எல் ரயில் கட்டணம் 125 ரிங்கிட்டில் தொடக்கம் – நவம்பர் மத்தியில் பயணச் சீட்டு விற்பனை

மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா கல்லறையில் 3 வாரங்களில் 25,000 பேர் அஞ்சலி

மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா கல்லறையில் 3 வாரங்களில் 25,000 பேர் அஞ்சலி

பேராக் வெள்ளம்: 156 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்; உதவிக்கு கடற்படை களமிறக்கம்

பேராக் வெள்ளம்: 156 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்; உதவிக்கு கடற்படை களமிறக்கம்