பேராக் மாநிலம், லாருட், மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 50 குடும்பங்களைச் சேர்ந்த 156 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி எஸ்கே மாத்தாங் கெளுகோர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் தங்கியுள்ளனர்.
மற்றொரு மையமான எஸ்கே மாத்தாங் பள்ளியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் தங்கியுள்ளனர்.
பலத்த புயல் மற்றும் வெள்ளத்தால் கம்போங் மாத்தாங் பாசீர், கம்போங் மாத்தாங் கெளுகோர் உள்ளிட்ட பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, புலாவ் பங்கோர் தீவின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக லூமுட் கடற்படைத் தளத்திலிருந்து 100 கடற்படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
மூன்று விரைவுத் தற்காப்புப் படகுகள் மற்றும் இரண்டு மீட்புப் படகுகள் மூலம் மீட்புப் பணிகளும் நிவாரண உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








