Oct 19, 2026
Thisaigal NewsYouTube

கார் மீது கன்டெய்னர் விழுந்து விபத்து: தந்தை, மகள் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் மீது கன்டெய்னர் விழுந்து விபத்து: தந்தை, மகள் பலி

கோத்தா கினபாலு, செபாங்கார் துறைமுகம் அருகே ஜாலான் செபாங்கார் சாலையில் நேற்று மாலை கன்டெய்னர் ஒன்று கார் மீது விழுந்த விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 49 வயதுடைய லோரி ஓட்டுநர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.15 மணியளவில், 53 வயதான முஹமட் ஜாடி பெல்பி, அவரது 24 வயதான மகள் நோர்ஃபைஸா முஹமட் ஜாடி ஆகியோர் பயணித்த டொயோட்டா அவான்ஸா கார் மீது, லோரியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த கன்டெய்னர் திடீரென விழுந்து நசுக்கியது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இரண்டு கிரேன்களின் உதவியுடன் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், காருக்குள் சிக்கிய இருவரையும் தீயணைப்பு வீரர்கள் இரவு 9.55 மணியளவில் மீட்டனர்.

எனினும், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அவர்களின் உடல்கள் தற்போது குயின் எலிஸபெத் I மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →