Oct 19, 2026
Thisaigal NewsYouTube

ஷா ஆலாம் அருகே ரயில் தண்டவாள சிக்னல் கேபிள் 60 மீட்டர் திருடப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஷா ஆலாம் அருகே ரயில் தண்டவாள சிக்னல் கேபிள் 60 மீட்டர் திருடப்பட்டது

பாடாங் ஜாவா-ஷா ஆலாம்-பத்து தீகா ரயில் பாதையில், இன்று அதிகாலை 6.20 மணியளவில் ரயில் தண்டவாளக் கண்காணிப்பு அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாக கேடிஎம்பி தமது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கேடிஎம்பி ரயில்வேயின் துணை போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போது, சுமார் 60 மீட்டர் நீளமுள்ள, 4 கோர்கள் கொண்ட 16 மில்லிமீட்டர் சிக்னல் கேபிள் வெட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கேபிளைச் சீரமைத்து மீண்டும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ரயில் தண்டவாளக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், ரயில் சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யவும் பாதுகாப்பு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கேடிஎம்பி தெரிவித்துள்ளது.

அதேவேளையில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள், கேடிஎம்பி துணைக் போலீஸ் படையின் 24 மணி நேரத் தகவல் மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு, கேடிஎம்பி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →