Oct 19, 2026
Thisaigal NewsYouTube

பூனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டு – விசாரணை கோரும் விலங்குகள் நல அமைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பூனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டு – விசாரணை கோரும் விலங்குகள் நல அமைப்பு

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி ஒன்றில் பூனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பெர்சத்துவான் ஹாய்வான் தெர்பியார் மலேசியா (Persatuan Haiwan Terbiar Malaysia) என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அக்காணொளியில் இடம் பெற்றுள்ள சம்பவம் உண்மையாக இருந்தால், அது மிகக் கடுமையான விலங்கு துன்புறுத்தலாகும் என்று அந்த அமைப்பின் தலைவர் கலைவாணன் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பது, காணொளியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிப்பது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேவேளையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பூனையைக் கண்டறிந்து அதன் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அந்தக் காணொளியைச் சமூக ஊடகங்களில் பரப்பியது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →