Oct 19, 2026
Thisaigal NewsYouTube

ரோப்லோக்ஸ் விளையாட்டு மூலம் சிறுவர்களுக்குத் தீவிரவாதப் பயிற்சி - ஆயோப் கான் அதிர்ச்சித் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரோப்லோக்ஸ் விளையாட்டு மூலம் சிறுவர்களுக்குத் தீவிரவாதப் பயிற்சி - ஆயோப் கான் அதிர்ச்சித் தகவல்

ரோப்லோக்ஸ் (Roblox) போன்ற இணைய விளையாட்டுகள் மூலம் 12 வயது சிறுவர்கள் உட்பட இளம் வயதினரை, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதக் குழுக்கள் தங்கள் பக்கம் ஈர்த்து, தாக்குதல் நடத்தப் பயிற்சி அளிப்பதாக பயங்கரவாதத் தடுப்பு நிபுணரும், முன்னாள் துணை ஐஜிபியுமான அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.

அண்மையில் 12, 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இது போன்ற விளையாட்டுகள் மூலம் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சிறுவர்கள் போலீசார், ராணுவத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொல்வது சரியான செயல் என்று நம்ப வைக்கப்படுவதையும் அயோ கான் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், தீவிரவாதச் சிந்தனைகள் பரவுவதைத் தடுக்கக் கடுமையான தடுப்புச் சட்டங்கள் தேவை என்றும், இளைஞர்களுக்குக் கல்வி வழங்குவதுடன் பெற்றோரும் அவர்களது இணையச் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், சிங்கப்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் ரோப்லோக்ஸ் மற்றும் கோர்பாக்ஸ் விளையாட்டுகளில் ஐஎஸ் அமைப்பின் தாக்குதல்கள் மற்றும் மரணதண்டனைகளைப் போன்ற காட்சிகளை உருவாக்கியதால், கடந்த ஜனவரி மாதம் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இணையம் மூலம் தீவிரவாதச் சிந்தனைக்கு ஆளான அந்தச் சிறுவன், வெளிநாடு சென்று அந்த அமைப்புக்காகப் போரிடவும் விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →