Oct 20, 2026
Thisaigal NewsYouTube

கேஎல்ஐஏ தாக்குதல் குற்றச்சாட்டு: ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேஎல்ஐஏ தாக்குதல் குற்றச்சாட்டு: ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரு போலீஸ் பணியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் தலைமை இயக்குநர் ஷுஹய்லி ஸையின் மீது, நாளை சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

கேஎல்ஐஏ முனையம் 1-ல் ஷுஹய்லி ஒருவருடன் மோதலில் ஈடுபடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

மலேசியாவில் நடைபெற்ற F1 போட்டிக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஏகேபிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே சில தரப்பினர் தனது நற்பெயரையும் ஏகேபிஎஸ் அமைப்பின் நற்பெயரையும் களங்கப்படுத்த முயற்சிப்பதாக ஷுஹய்லி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அதிகாரிகள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →