Oct 20, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கில் இந்தோனேசியப் பெண் துன்புறுத்தல் - 6 ஆண்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கில் இந்தோனேசியப் பெண் துன்புறுத்தல் - 6 ஆண்கள் கைது

பினாங்கு மாநிலத்தில், உடல் முழுவதும் தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்ணைத் துன்புறுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் 6 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அந்தப் பெண்ணின் முதலாளியும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் கூறுகையில், நேற்று பட்டர்வொர்த் பகுதியில் உள்ள டயர் கடையில் நடத்தப்பட்ட சோதனையின் போது 6 பேரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பெண், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி சிலாங்கூர் மாநிலம், தஞ்சோங் செப்பாட் அருகே உள்ள கம்போங் தும்புக் பகுதியில் தனது முதலாளியால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ தாக்குதல் குற்றச்சாட்டு: ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

கேஎல்ஐஏ தாக்குதல் குற்றச்சாட்டு: ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

அமைச்சர் மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: அடிப்படை ஆதாரமற்ற கருத்து என அன்வார் மறுப்பு

அமைச்சர் மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: அடிப்படை ஆதாரமற்ற கருத்து என அன்வார் மறுப்பு

ஜோகூரில் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி – வைரலான காணொளி குறித்து போலீசார் விசாரணை

ஜோகூரில் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி – வைரலான காணொளி குறித்து போலீசார் விசாரணை

கெடாவில் துணிக்கிடங்கில் இரகசியமாக மானிய சமயல் எண்ணெய் விற்பனை - இருவர் கைது

கெடாவில் துணிக்கிடங்கில் இரகசியமாக மானிய சமயல் எண்ணெய் விற்பனை - இருவர் கைது

நல உதவி பெறும் வருமான வரம்பை 2,705 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் – எம்.பி. வலியுறுத்தல்

நல உதவி பெறும் வருமான வரம்பை 2,705 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் – எம்.பி. வலியுறுத்தல்

சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சி – சிறப்பு நூல், தபால் தலை, நினைவு நாணயம் வெளியீடு

சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சி – சிறப்பு நூல், தபால் தலை, நினைவு நாணயம் வெளியீடு