Oct 20, 2026
Thisaigal NewsYouTube

கெடாவில் துணிக்கிடங்கில் இரகசியமாக மானிய சமயல் எண்ணெய் விற்பனை - இருவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெடாவில் துணிக்கிடங்கில் இரகசியமாக மானிய சமயல் எண்ணெய் விற்பனை - இருவர் கைது

கெடா மாநிலம், கோலா மூடா பகுதியில் பயன்படுத்தப்படாத துணிக்கிடங்கை மறைவிடமாகப் பயன்படுத்தி, மானிய விலை சமையல் எண்ணெயைப் பதுக்கி வைத்திருந்ததை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான கேபிடிஎன் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

கெமுனிங் தொழில்துறைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், உரிய அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த 3,383 பொதிகள் சமையல் எண்ணெயைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அவற்றின் மொத்த மதிப்பு 8 ஆயிரத்து 457.50 என மதிப்பிடப்பட்டுள்ளதாக, கெடா மாநில கேபிடிஎன் தலைமை இயக்குநர் நிஸாம் பின் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்தில் இருந்த இரண்டு ஆடவர்களை கைது செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கு 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜோகூரில் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி – வைரலான காணொளி குறித்து போலீசார் விசாரணை

ஜோகூரில் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி – வைரலான காணொளி குறித்து போலீசார் விசாரணை

பினாங்கில் இந்தோனேசியப் பெண் துன்புறுத்தல் - 6 ஆண்கள் கைது

பினாங்கில் இந்தோனேசியப் பெண் துன்புறுத்தல் - 6 ஆண்கள் கைது

நல உதவி பெறும் வருமான வரம்பை 2,705 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் – எம்.பி. வலியுறுத்தல்

நல உதவி பெறும் வருமான வரம்பை 2,705 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் – எம்.பி. வலியுறுத்தல்

சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சி – சிறப்பு நூல், தபால் தலை, நினைவு நாணயம் வெளியீடு

சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டுகால ஆட்சி – சிறப்பு நூல், தபால் தலை, நினைவு நாணயம் வெளியீடு

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு