தொழிலதிபரிடம் இருந்து அமைச்சர் ஒருவர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்ற கருத்து என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராhim மறுத்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கேள்வி–பதில் அமர்வில் உரையாற்றிய அவர், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எந்தவித விதிவிலக்குமின்றி விசாரிக்கப்பட வேண்டும் எனத் குறிப்பிட்டார்.
அதேவேளையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்றும், அந்த அமைச்சர் அக்குற்றச்சாட்டை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழல் என்பது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல எனக் குறிப்பிட்ட அவர், தனது கட்சியான பிகேஆர் உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் விசாரணையைத் தடுக்கத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வரும் தனது முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சூல் இஸ்கண்டார் அகின் தொடர்பான விவகாரத்தை அன்வார் மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னதாக உலு திரங்கானுவில் தொகுதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோசோல் வாஹிட், தொழிலதிபர் விக்டர் சின், ஃபார்ஹாஷ் வாஃபா சல்வாடோர் ரிஸால் முபாராக் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அஸாம் பாக்கி ஆகியோர் தொடர்புடையதாகக் கூறப்படும் 'கார்ப்பரேட் மாஃபியா' நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் பற்றி கேள்வி எழுப்பினார்.
மேலும், கார்ப்பரேட் மாஃபியா தொடர்பான விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்படுவதற்காக ஓர் அமைச்சர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து அக்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் சட்டப்படி நடைபெற வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என அன்வார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.








