ஹரி ராயா பண்டிகையை நன்றியுணர்வுடன் கொண்டாடுவதோடு, உலகளாவிய அசாதாரண நிலைகளுக்கு தயார் நிலையில் இருக்குமாறு மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் சுல்தான் ஷரபுதீன் இட்ரிஸ் ஷா மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று சிலாங்கூர் அரச மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், சுல்தானும், அரசியார் தெங்கு பெர்மிசூரி நோராஷிகினும் இணைந்து, 1447 ஹிஜ்ரா ஆண்டின் எடில்பித்ரி-ஐ அமைதியாகக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியைத் தெரிவித்தனர்.
இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் தொடரும் மோதல்கள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.
போர் காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதாரச் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள, மக்கள் தங்கள் செலவினங்களில் விவேகமாக இருக்குமாறு சுல்தான் அறிவுறுத்தியுள்ளார்.








