பேரா மாநில இந்தியர்கள் ஜசெக விற்கு பக்காத்தான் ஹராப்பானுக்கும் தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கி வருவதால் இந்திய சமுதாயத்தின் நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று தெலுக் இந்தான், பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் உறுதி அளித்தார்.
பேரா மாநிலத்தில் இந்தியர்களுக்கு பத்து லட்சமோ, 20 லட்சமோ அல்லது 30 லட்சமோ ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாறாக, 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ கா லியோங் தெரிவித்தார்.
அண்மையில் தெலுக் இந்தான், இரண்டரை மைல் கம்போங் பஞ்சார், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்த பூ கா லியோங், ஆலய வளர்ச்சிக்கு 30 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை ஆலய பொறுப்பாளர்களிடம் வழங்கியப் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஜசெக. இருப்பதால் இவை அனைத்தும் சாத்திமாகிறது என்ற வூ கா லியோங் தாமும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ங்கா கோர் மிங்கும் இவ்வட்டாரத்தில் இந்தியர்களின் நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்ந்து தாற்காக்கப்படும் என்று உறுதி அளித்தார்.








