Sep 1, 2026
Thisaigal NewsYouTube
7 நாள் தடுப்புக்காவல் முடிந்தது – முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர், முன்னாள் கருவூலத் தலைமைச் செயலாளர் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

7 நாள் தடுப்புக்காவல் முடிந்தது – முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர், முன்னாள் கருவூலத் தலைமைச் செயலாளர் விடுவிப்பு

Share:

தாபோங் ஹாஜி நிர்வாகம் தொடர்பான ஊழல் விசாரணையில், ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அதன் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் கருவூலத் தலைமைச் செயலாளர் ஆகிய இருவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் இன்று காலையில் விடுவித்துள்ளது.

ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கிய தடுப்புக்காவல் உத்தரவு இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

60 வயதைக் கடந்த இருவரும் டத்தோஸ்ரீ மற்றும் டான்ஸ்ரீ அந்தஸ்தைக் கொண்டவர்கள் என்றும், அவர்களிடம் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்து முடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான தாபோங் ஹாஜியின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் சொத்துகள் தொடர்பான அரச ஆணைய விசாரணை அறிக்கையான ஆர்.சி.ஐ–யில் வகைப்படுத்தப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தாபோங் ஹாஜியின் நஷ்டமடைந்த முதலீடுகள் தொடர்பான இழப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆண்டுதோறும் லாபப் பங்கீட்டை நியாயப்படுத்த உண்மைகள் மறைக்கப்பட்டு, கணக்குகள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதை ஆர்.சி.ஐ அறிக்கை கண்டறிந்தது.

Related News