Sep 7, 2026
Thisaigal NewsYouTube
விக்டோரியா பாலத்தில் இருந்து 5 மீட்டர் உயரத்தில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலி
தற்போதைய செய்திகள்

விக்டோரியா பாலத்தில் இருந்து 5 மீட்டர் உயரத்தில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலி

Share:

பேராக், சுங்கை சிப்புட் அருகே எங்கோர் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா பாலத்தில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

நேற்று மாலை சுமார் 6 மணியளவில், 42 வயதான தனது தந்தையுடன் கைகோர்த்து பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவன், பாலத்தில் இருந்த ஓர் இடைவெளியில் தவறி விழுந்ததாக சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் தலைவர் சரண் ஐ வான் தெரிவித்தார்.

சுமார் 5 மீட்டர் உயரத்திலிருந்து பாலத்தின் கீழே இருந்த தார்ச்சாலையில் சிறுவன் விழுந்தான்.

உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக கோலா கங்சார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

எனினும், சிகிச்சை பலனின்றி இரவு 7.40 மணியளவில் சிறுவன் உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது.

சிறுவனின் குடும்பத்தினர் ஜோகூர், குளுவாங்கைச் சேர்ந்தவர்கள் என்றும், விடுமுறைக்காக கோலா கங்சாருக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக விக்டோரியா பாலம் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து